×

தனி நபர்கள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய ஊரணி மகளிர் மன்றத்தினர் புகார்

திருவாடானை,ஆக.24: திருவாடானை அருகே சின்னத்தொண்டி கிராமத்தில் ஊரின் மையப்பகுதியில் பொது ஊரணி ஒன்று உள்ளது. மூன்று ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த ஊரணியில் கரை பகுதி முழுவதும் சிலர் வீடுகளை கட்டியும் மற்றும் கழிப்பறை குளியல் அறை போன்ற கட்டுமானங்களை ஆக்கிரமித்து கட்டி வைத்துள்ளனர். மேலும் மிளகாய் தோட்டம், வைக்கோல் படப்பு போன்றவைகளை வைத்து வேலி அமைத்துள்ளனர். இதனால் ஊரணி பாதி அளவாக சுருங்கி விட்டதாக கூறி அதனை அகற்ற வேண்டும் என சின்னத்தம்பி கிராமத்தைச் சேர்ந்த மகளிர் மன்ற பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் திருவாடானை தாலுகா அலுவலகத்திற்கு வந்து தாசில்தாரை சந்தித்து மனு அளித்தனர்.

இதுகுறித்து மகளிர் மன்ற பெண்கள் கூறுகையில், எங்கள் கிராமத்தின் தண்ணீர் தேவையை முழுவதுமாக பூர்த்தி செய்து வந்த அந்த ஊரணி, இப்போது கிராமத்தை சேர்ந்த சில தனி நபர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு சுருங்கி விட்டது. ஊரணி கரையில் பாதை இல்லாமல் அடைத்து வைத்து விட்டனர். மேலும் ஊரணியை தூர்த்து வீடுகள் மற்றும் கழிப்பறைகளை கட்டி ஊரணியின் பரப்பளவை சுருக்கி விட்டனர். இந்த ஊரணியை தூர்வார அரசால் நிதி ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், ஆக்கிரமிப்பு காரணமாக மராமத்து செய்ய முடியாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. எனவே ஊரணி ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Pani ,
× RELATED பள்ளி வேன் குளத்தில் கவிழ்ந்து 15 மாணவர்கள் காயம்