×

கே.அத்திகோம்பையில் புதிய நியாய விலை கடை கட்டிடப்பணி அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டினார்

ஒட்டன்சத்திரம். ஆக. 24.  ஒட்டன்சத்திரம் ஒன்றியத்துக்குட்பட்ட கே. அத்திக்கோம்பை ஊராட்சியில் அத்திக்கோம்பை பெருமாள் கோயில் ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைத்தல் மற்றும் புதிய நியாய விலை கட்டிடம் கட்டுவதல் உள்ளிட்ட பணிகளுக்கு உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி அடிக்கல் நாட்டி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்வில் திண்டுக்கல் பாராளுமன்ற உறுப்பினர்  ப.வேலுச்சாமி, ஒன்றிய  செயலாளா்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், ஒன்றிய துணைச் செயலாளர் முருகானந்தம் ,ஒன்றிய பெருந்தலைவர் அய்யம்மாள், ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சண்முகம், ஊராட்சி மன்ற தலைவர்கள் சிவராமகிருஷ்ணன், செல்லம்மாள் தண்டபாணி, ஊராட்சி செயலர் மலர்விழி மற்றும் வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Construction Minister ,A. Chakrapani ,Fair Price Shop ,K. Athikombai ,
× RELATED சிறுமையிலூர் ஊராட்சியில் புதிய...