×

காங்கயம் நீதிமன்ற வளாகத்தில் இலவச மருத்துவ பரிசோதனை முகாம்

காங்கயம், ஆக. 24: திருப்பூர் மாவட்ட பார்வையிழப்பு தடுப்பு சங்கம், காங்கயம் வட்ட சட்டப்பணிகள் குழு, காங்கயம் வழக்குரைஞர் சங்கம், திருப்பூர் மெல்வின் ஜோன்ஸ் அரிமா சங்கம், திருப்பூர் லோட்டஸ் கண் மருத்துவமனை, ரேவதி மருத்துவமனை மற்றும் ஆதவ் பல் மருத்துவமனை சார்பில் பொது மருத்துவம், இசிசி, கண் சிகிச்சை மற்றும் அக்குபஞ்சர், இலவச பரிசோதனை முகாம் காங்கயம் நீதிமன்ற வளாகத்தில் நேற்று நடைபெற்றது.

காங்கயம் வழக்கறிஞர்கள் சங்கம் செயலாளர் செல்வகுமார் வரவேற்றார். காங்கயம் மாவட்ட உரிமையியல் நீதிபதி நாகலட்சுமி, திருப்பூர் மெல்வின் ஜேன்ஸ் அரிமாசங்க தலைவர் ராஜ்குமார் ஆகியோர் வாழ்த்தினர். ரேவதி மருத்துவமனை சதீஷ் முகாம் குறித்து விளக்கினார். காங்கயம் சார்பு நீதிமன்ற நீதிபதி ராஜா முகாமை தொடக்கி வைத்து பேசினார்.  இதில் பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர். காங்கயம் வழக்கறிஞர் சங்க பொருளாளர் சரவணன் நன்றி கூறினார்.

Tags : Kangyam Court Complex ,
× RELATED பல்லடம் அரசு பள்ளிகளுக்கு நோட்டு, புத்தகங்கள் விநியோகம்