×

தாராபுரம் நகர திமுக நிர்வாகிகள் சார்பில் பல்லடம் வரும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க முடிவு

தாராபுரம், ஆக. 24: தாராபுரம் நகர திமுக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் பழைய நகராட்சி வளாகத்தில் நடந்தது. நகர திமுக அவைத்தலைவர் கதிரவன் தலைமை தாங்கினார். நகரச்செயலாளர் முருகானந்தம், நகரத்துணைச் செயலாளர்கள் கமலக்கண்ணன், தவச்செல்வன், செலின் பிலோமினா, முன்னாள் எம்எல்ஏ சரஸ்வதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் இன்று (24ம் தேதி) மாலை பல்லடத்திற்கு வருகை தரும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வரவேற்பு அளிக்க ஒவ்வொரு வார்டுகளில் இருந்தும் தொண்டர்களை திரட்டி 15 வாகனங்களுடன் சென்று சிறப்பான வரவேற்பு அளிப்பது என்று முடிவு செய்யப்பட்டது.கூட்டத்தில் தாராபுரம் நகர கட்சி நிர்வாகிகள் சீனிவாசன், செந்தில்குமார், முகமது யூசுப், ஐயப்பன், நகர்மன்ற உறுப்பினர்கள், மற்றும் இளைஞர் அணியினர் கலந்து கொண்டனர்.

Tags : Chief Minister ,Palladam ,DMK ,Tarapuram ,
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மீனவ...