×

மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மழைநீர் வாறுகால் ‘கிளீன்’: பொதுமக்கள் மகிழ்ச்சி

போடி: போடி அருகே உள்ள மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் கரட்டுப்பட்டி, ரெங்கநாதபுரம், தர்மத்துப்பட்டி, கீழச்சொக்கநாதபுரம், வினோபாஜி காலனி ஆகிய பகுதிகள் உள்ளன; 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசிக்கின்றனர். இப்பேரூராட்சியில் தமிழக அரசின் 6 நாள் தூய்மைப் பணி முகாம் நடந்தது. இதையொட்டி பேரூராட்சியில் 28 கி.மீ சுற்றளவில் மழைநீர் மற்றும் கழிவுநீர் வாறுகால் தூர்வாரும் பணி நடந்தது.மழைநீர் மற்றும் கழிவுநீர் வாறுகால்களில் குவிந்த மணல், பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவை அப்புறப்படுத்தப்பட்டன. பேரூராட்சி செயல் அலுவலர் கங்காதரன் தலைமையில், தூய்மைப் பணியாளர்கள் தூர்வாரும் பணியில் ஈடுபட்டனர். இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்….

The post மேலச்சொக்கநாதபுரம் பேரூராட்சியில் மழைநீர் வாறுகால் ‘கிளீன்’: பொதுமக்கள் மகிழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Malochockanathapuram Parrutakshi ,Bodi ,Belochokanathapuram Badi ,Karathapatti ,Renganathapuram ,Darmathupatti ,Dadachokkanathapuram ,Vinobaji Colony ,Kanathapuram ,
× RELATED கொட்டகுடி ஆற்றில் நீர்வரத்து துவக்கம்