×

திருவாரூர் மாவட்டத்தில் 400 மையங்களில் கொரோனா தடுப்பூசி முகாம்

திருவாரூர், ஆக. 23: திருவாரூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் 400 மையங்களில் நடைபெற்ற மெகா கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமில் 30 ஆயிரத்து 141 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஹேமசந்த் காந்தி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் கொரோனா தொற்றினை முற்றிலுமாக ஒழிக்கும் வகையில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அரசின் சார்பில் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மாவட்ட மருத்துவமனை, தாலுகா மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் முகாம்கள் போன்றவற்றின் மூலம் நடைபெற்று வரும் நிலையில் அவ்வப்போது மெகா சிறப்பு முகாமும் நடத்தப்பட்டு வருகிறது.

அதன்படி நேற்று முன்தினம் மாநிலம் முழுவதும் இந்த மெகா சிறப்பு முகாமானது நடைபெற்றது. திருவாரூர் மாவட்டத்தில் ஊரக பகுதிகளில் 242 மையங்களிலும், நகரப்பகுதிகளில் 40 மையங்களிலும், பேரூராட்சி பகுதிகளில் 18 மையங்களிலும் மற்றும் 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள், 8 தாலுக்கா மருத்துவமனைகள், அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் மற்றும் 40 நடமாடும் குழுக்கள் என மொத்தம் 400 மையங்கள் மூலம் தடுப்பூசிகள் செலுத்தும் பணி நடைபெற்றது. இதில் முதல் தவனையாக 4 ஆயிரத்து 167 பேர்களும், 2ம் தவனையாக 9 ஆயிரத்து 223 பேர்களும் மற்றும் பூஸ்டர் தடுப்பூசியாக 16 ஆயிரத்து 751 பேர்களும் என மொத்தம் 30 ஆயிரத்து 141 பேர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே மாவட்டத்தில் முதல் தவனையாக 9 லட்சத்து 10 ஆயிரம் பேர்களுக்கும், 2ம் தவனையாக 8 லட்சத்து 30 ஆயிரம் பேர்களுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை சுகாதார துறை துணை இயக்குனர் டாக்டர் ஹேமசந்த்காந்தி தெரிவித்துள்ளார்.

Tags : Corona vaccination ,Tiruvarur district ,
× RELATED நீடாமங்கலம் பகுதியில் புளியம் பழங்கள் அறுவடை பணி