பாபநாசம் பேரூராட்சி 8வது வார்டில் மக்களைத்தேடி மருத்துவ முகாம்

பாபநாசம், ஆக.23: பாபநாசம் பேரூராட்சி 8வது வார்டில் நடைபெற்ற மக்களைத்தேடி மருத்துவ முகாமில் 200 பேர் கலந்து கொண்டு பயன்பெற்றனர். தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் பேரூராட்சியில் 8-வது வார்டு காளியம்மன் கோவில் தெருவில் தமிழக அரசின் மக்களை தேடி மருத்துவ முகாம் நடைபெற்றது. பேரூராட்சி கவுன்சிலர் பிரேம்நாத் பைரன் தலைமை வகித்து முகாமினை துவக்கி வைத்தார். முகாமில் சிகிச்சை பெற வந்த பொதுமக்களுக்கு, சுகாதார செவிலியர் துர்கா தேவி, மக்களை தேடி மருத்துவ சுகாதார பணியாளர்கள் பவானி, ரேவதி, ஜெயந்திமேரி, வைஜெயந்தி மாலா, அம்பிகா, ரேகா, காயத்ரி ஆகியோர் பொதுமக்களுக்கு இரத்த அழுத்தம், சர்க்கரை அளவு ஆகியவற்றை பரிசோதனை செய்தனர். மருந்து மாத்திரைகள் வழங்கப்பட்டது. இம்முகாமில் சுமார் 200 பேர் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டவர்களை அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்கு பரிந்துரை செய்து அனுப்பி வைத்தனர். முகாமில் பாபநாசம் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் திவாகரன், மாவட்ட பிரதிநிதி ராஜு, நிர்வாகிகள் விக்கி, வெங்கட்ராமன், செந்தில், மணிமாறன், சரவணன் மற்றும் சுகாதார பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: