×

சீர்காழில் இருந்து தருமபுரிக்கு 2000 மெ.டன் நெல் மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைப்பு

சீர்காழி, ஆக. 22: சீர்காழி சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகளிடமிருந்து தமிழ்நாடு நுகர் பொருள் வாணிப கழகம் மூலம் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகள் மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு சேமிப்பு கிடங்குகளில் வைக்கப்பட்டிருந்தது.  இந்நிலையில் நேற்று தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக மண்டல முதுநிலை மேலாளர் ராஜகுமார் ஆலோசனையின் பேரில், சேமிப்பு கிடங்குகளில் இருந்த நெல் மூட்டைகள் லாரிகள் மூலம் சீர்காழி ரயில் நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டது.  பின்னர் 42 ரயில் பெட்டிகள் மூலம் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் மூட்டைகள் தொழிலாளர்கள் மூலம் தருமபுரிக்கு அரவை செய்வதற்காக அனுப்பி வைக்கப்பட்டது. இந்த பணியில் தர கட்டுப்பாட்டு அலுவலர் ராஜேந்திரன் மற்றும் ஊழியர்கள் ஈடுபட்டனர்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட கட்டிடத்தில் இயங்கி வருகிறது. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் மெஜூரா கம்பெனியின் குதிரை லாயமாக இருந்தது. அப்போது இந்த இடம் ஓட்டுகட்டிமாக இருந்ததால் அதை மட்டும் அகற்றி விட்டு கான்கிரீட் தளமாக மாற்றப்பட்டது. ஆனால் கட்டிடத்தின் அஸ்திவாரமும், சுவர்களும் சுண்ணாம்பு காரை கொண்டு கட்டுப்பட்டுள்ளது.

Tags : Sirkaj ,Dharmapuri ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில்...