×

கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாம்

கரூர், ஆக.23: கரூர் மாநகராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் தடுப்பு முகாமை ஆணையர் ரவிச்சந்திரன் வீடு, வீடாக சென்ற ஆய்வு செய்தார். தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் வராமல் இருப்பதற்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு நேரடியாக உத்தரவு பிறப்பித்து நேரில் சென்று பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு அறிவுறுத்தி இருந்தார்.

இதனடிப்படையில் கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் 41-வது வார்டு ஜீவா நகர் பகுதியில் பொதுமக்களிடம் வீடுவீடாகச் சென்று தண்ணீா் பிடிக்கும் பாத்திரங்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் .குடிநீர் கொதிக்க வைத்து ஆறவைத்து குடிக்கவேண்டும், வீடுகளில் கழிவு நீர் தேங்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும், மழைக்காலங்களில் நீர் தேங்கும் பகுதிகளில் கொசுக்கள் உற்பத்தியாகாமல் தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும் பழைய டயர் பழைய பானை தொட்டி ஆகியவற்றில் மழை நீர் தேங்காதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் .அவ்வாறு உள்ள பொருட்களை பொதுமக்கள் தாங்களாகவே முன்வந்து அப்புறப்படுத்தி வழியை அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் குப்பைகளை கொட்ட வேண்டும்.

எதிர்பாராமல் யாருக்கேனும் காய்ச்சல் இருப்பின் உடனடியாக அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்று மருத்துவரிடம் காண்பித்து உரிய சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் மேலும் கொசுக்களை ஒழிக்க வரும் மாநகராட்சி சுகாதார அதிகாரிகளுக்கு
பொதுமக்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி வீடு வீடாக பிரசாரம் மேற்கொண்டார். நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார அதிகாரி டாக்டர் லட்சிய வர்மா, மாமன்ற உறுப்பினர் தண்டபாணி மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Tags : Dengue ,Prevention Camp ,Karur Corporation Area ,
× RELATED வல்லநாடு ஊராட்சி பகுதியில் டெங்கு தடுப்பு பணி தீவிரம்