×

நீட் தேர்வு தோல்வி பயத்தில் மகள் தற்கொலை குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை: டெய்லர் கலெக்டர் அலுவலகத்தில் மனு

கரூர், ஆக. 23: கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மக்கள் குறைதீர் நாள் கூட்டத்தில், கரூர் மாவட்டம் கடவூர் வட்டம், கொள்ளுத்தண்ணிப்பட்டி பகுதியை சேர்ந்த சேகர் என்பவர் தனது குடும்பத்துடன் வந்து வழங்கிய மனுவில் தெரிவித்துள்ளதாவது: இந்த பகுதியில் டெய்லர் வேலை செய்து வருகிறேன். எனக்கு லட்சுமி என்ற மனைவியும், ப்ரித்தி, பிரவினா என இரண்டு மகள்களும், கதிர்வேல் என்ற மகனும் உள்ளனர். முதல் மகள் ப்ரித்தி, கரூர் மாவட்டம் வேங்காம்பட்டியில் வசித்து வரும் மாமியார் கருப்பாயி என்பவர் வீட்டில் தங்கி, அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் பிளஸ் 2 பயின்று வந்தார். 2020-21ம் கல்வியாண்டில் பிளஸ் 2 தேர்வில் வெற்றி பெற்று, மருத்துவ படிப்பு பயில வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருந்தார்.

கடந்த 2020-21ம் கல்வியாண்டில் மருத்துவ நீட் தேர்வு எழுதி தோல்வி அடைந்த நிலையில், மீண்டும், ஜூலை மாதத்தில் நீட் தேர்வு எழுதினார். நீட் தேர்வு முடிவுகள் வரும் முன்பே, மன உளைச்சலில் இருந்த முதல் மகள், தோல்வி அடைந்து விடுவோமோ என்ற பயத்தில் மாமியார் வீட்டில் இல்லாத சமயத்தில் தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார். இதனால், குடும்பத்தினர் அனைவரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எனவே, மாவட்ட கலெ க்டர் பரிசீலனை செய்து, குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனுவில் தெரிவித்துள்ளனர்.

Tags : Taylor Collector ,
× RELATED தோகைமலை அருகே முள்காட்டில் பதுக்கி வைத்து மதுபாட்டில் விற்றபெண் கைது