×

செக்காரக்குடியில் சுகாதார திட்டம் தொடக்க விழா

செய்துங்கநல்லூர், ஆக.23: கருங்குளம் ஊராட்சி ஒன்றியம் செக்காரக்குடியில் சுகாதாரத்தை பேணும் வகையில் ‘நம்ம ஊரு சூப்பரு‘ திட்டம் தொடக்க விழா நடந்தது. கூடுதல் ஆட்சியர் சரவணன் திட்டத்தினை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிக்கு செக்காரக்குடி ஊராட்சி மன்றத்தலைவர் ராமலெட்சுமி தலைமை வகித்தார்.  

கருங்குளம் யூனியன் சேர்மன் கோமதி ராஜேந்திரன் முன்னிலை வகித்தார். மக்கும் குப்பை மற்றும் மக்காத குப்பை ஆகியவற்றை பிரித்து அளிக்கும் வகையில் பொதுமக்களுக்கு பச்சை, சிகப்பு வண்ணத்தில் வாளிகளை கூடுதல் ஆட்சியர் சரவணன் வழங்கினார்.
தொடர்ந்து செக்காரக்குடி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சுமார் 150 பேர் பங்கேற்று கிராம பொது சுகாதாரம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடந்தது. நிகழ்ச்சியில் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செல்வி, பாக்கியலீலா, பொறியாளர் சித்திரைச் செல்வன், ஓவர்சீயர் சீனிவாசன், சுகாதார ஒருங்கிணைப்பாளர் மாரியப்பன், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் நம்பிராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Inauguration of ,Project ,Sekarakudy ,
× RELATED இலங்கையில் அதானி காற்றாலை திட்டத்துக்கு எதிர்ப்பு