கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம்

தேனி, ஆக. 23: தேனி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் முரளிதரன் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் சுப்பிரமணியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் தண்டபாணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் முதியோர் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை, பட்டா மாறுதல், கல்விக்கடன், இலவச தையல் இயந்திரம், காவல்துறை தொடர்பான மனுக்கள் என 229 மனுக்கள் பொதுமக்களால் அளிக்கப்பட்டது. இம்மனுக்கள் மீது விசாரணை நடத்தி உரிய தீர்வு அளிக்கும்படி, உரிய துறைகளுக்கு கலெக்டர் பரிந்துரைத்தார்.

Related Stories: