திருப்புத்தூரில் காவலர் குடியிருப்பு கட்ட பூமிபூஜை

திருப்புத்தூர், ஆக.23: திருப்புத்தூர் புதுப்பட்டியில் காவலர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்ட நேற்று பூமி பூஜை போடப்பட்டு பணிகள் துவங்கப்பட்டது.

திருப்புத்தூர் புதுப்பட்டியில் தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கப்பட்டு புதிதாக கட்டப்பட உள்ள 50 காவலர் குடியிருப்பு பணிக்கு நேற்று பூமிபூஜை நடைபெற்றது. திருப்புத்தூர் டவுன் இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் மற்றும் காவலர்கள் பூமி பூஜை போட்டனர்.

புதிதாக கட்டப்படவுள்ள குடியிருப்பில் ஒரு இன்ஸ்பெக்டர், 3 எஸ்.ஐ.க்கள், 46 காவலர்களுக்கு என மொத்தம் 50 புதிய குடியிருப்புகள் கட்டப்பட உள்ளன.  

Related Stories: