குரூப் 1 காலி பணியிடத்துக்கு இலவச பயிற்சி வகுப்புகள்; கலெக்டர் தகவல்

திருவள்ளூர்: கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் வௌியிட்ட அறிக்கை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்ட குரூப் - 1 பணிக்காலியிடங்களுக்கு விண்ணப்பித்த திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்களுக்கு மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டம் வாயிலாக இலவச பயிற்சி வகுப்பு தொடங்கப்பட உள்ளது.

இலவச பயிற்சி வகுப்பில் கலந்துகொள்ள விரும்ப உள்ள திருவள்ளுர் மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்பதாரர்கள் திருவள்ளுர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் நேரிலோ, தொலைபேசி வாயிலாகவோ தங்களது விருப்பத்தினை கைப்பேசி எண்ணுடன் உடன் தெரிவிக்கவும். மேலும் இந்த இலவச பயிற்சி வகுப்பு அலுவலக வேலை நாட்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை 24 ஆம் தேதி முதல் நடைபெறும். மேலும் விவரங்களுக்கு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலக தொடர்பிற்கு 044-2766 0250, 9499055893 என்ற எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Related Stories: