ஆவடி காவல் ஆணையரகத்தில் சாலை பாதுகாப்புக்கு பிரத்யேக வலைதளம்: போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார்

ஆவடி: ஆவடி காவல் ஆணையரகத்தில், பாதுகாப்புக்கான பிரத்யேக வலைதளம் மற்றும் பள்ளி மாணவர்களுடன் இணைந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கி வைத்தார். ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் பள்ளி மாணவர்களின் போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ரோந்து பணி துவக்க நிகழ்ச்சி நேற்று அயப்பாக்கத்தில் ஒரு தனியார் பள்ளியில் நடந்தது.

இந்நிகழ்ச்சிக்கு, கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் தலைமை தாங்கினார். இதில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் பள்ளி மாணவர் அமைப்பை துவக்கி வைத்தார். மேலும், சாலை பாதுகாப்பு குறித்த தகவல்கள் அறியும் வகையில் பிரத்யேக வலைதளம் மற்றும் சாலை பாதுகாப்பு ரோந்து எனும் பெயர் அச்சிடப்பட்ட கொடியை கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் துவக்கினார். இந்த அமைப்பு, மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு போக்குவரத்து பாதுகாப்பு, சாலை விதிகள், சிக்னல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளை மேற்கொள்வர். இதில் கூடுதல் ஆணையர் விஜயகுமாரி, போக்குவரத்து துணை ஆணையர் அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: