×

நெல்லை அஞ்சல் கோட்டத்தில் 24 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை: நகர்ப்புற மக்கள் அதிக ஆர்வம்

நெல்லை: நெல்லை அஞ்சல் கோட்டத்தில் நேற்று மாலை வரை 24 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனையாகியுள்ளன. கிராமங்களை விட நகர்ப்புறங்களில் தேசிய கொடிகளை வாங்கி வீடுகளில் கட்டுவதில் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர். இந்தியத்திருநாட்டின் 75வது ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு வரும் இன்று தொடங்கி வரும் 15ம் தேதி வரை நாட்டில் உள்ள அனைவரும் அவரவர் வீட்டில் தேசியக் கொடியை ஏற்றி கொண்டாட அழைப்பு விடுவிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு தனி நபரும் அவரவர் வீட்டில், வெட்ட வெளியில் இரவு, பகல் என வித்தியாசம் பாராமல் 3நாட்களும் தேசியக் கொடியை ஏற்றிக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பொதுமக்களுக்கு தேசிய கொடியை வழங்கும் வகையில் நாட்டில் உள்ள அனைத்து 1 லட்சத்து 60 ஆயிரம் தபால் நிலையங்களும் நேரிலும் மற்றும் ஆன்லைனிலும் இந்திய தேசிய கொடியை விற்பனை செய்ய உத்தரவிடப்பட்டிருந்தது.
 
வீடுகள், அலுவலகங்கள், பொதுமக்கள் பயன்படுத்தும் இடங்களில் தேசிய கொடியை ஏற்றிட ஒன்றிய அரசு அறிவுறுத்தியுள்ளது. இதற்காக அஞ்சல் துறை அனைத்து அஞ்சலகங்களிலும் தேசிய கொடி விற்பனை தொடங்கி நடந்து வருகிறது. துணியால் ஆன 20 இன்சுக்கு 30 இன்ச் அளவுள்ள தேசியக் கொடி ரூ.25 ஆகும். புரம், பாளை, அம்பை தலைமை தபால் நிலையங்களை உள்ளடக்கிய நெல்லை கோட்டத்தில் நேற்று மாலை வரை 24 ஆயிரம் தேசிய கொடிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதில் கிராமப்புறங்களை விட நகர்ப்புறங்களில் அதிக விற்பனை நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வீடுகளில் தேசிய கொடியை இப்போது பறக்கவிட்டுள்ளனர். மேலும் அரசு அலுவலகங்கள், ஆட்டோக்கள், வேன்கள் என பலவற்றிலும் தேசியக் கொடி பறக்கவிடப்பட்டுள்ளது. தபால் நிலையங்களில் தேசிய கொடிகள் வர வர விற்பனை இம்முறை களைகட்டியது குறிப்பிடத்தக்கது.

சுத்தமல்லியில் புகையிலை விற்றவர் கைது பேட்டை: சுத்தமல்லி போலீஸ் எஸ்ஐ ஆறுமுகபெருமாள் மற்றும் போலீசார், சுத்தமல்லி மேலத்தெரு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் உள்ள கடையில் சோதனை நடத்தினர். அங்கு விற்பனைக்காக தடை செய்யப்பட்ட 8 புகையிலை பாக்கெட்டுகள் பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதையடுத்து அவற்றை பறிமுதல் செய்த போலீசார், கடை உரிமையாளர் இதே பகுதியை சேர்ந்த முருகனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Nellai ,
× RELATED நெல்லை மக்களவைத் தொகுதியில் தேர்தல் விதிகளை மீறியதாக 564 வழக்குகள் பதிவு..!!