தாம்பரம் அருகே அடுத்தடுத்து 2 வீடுகளின் பூட்டை உடைத்து 20 சவரன், ரூ. 10,000 கொள்ளை; மர்ம நபர்களுக்கு வலை

தாம்பரம்: தாம்பரம் அடுத்த இரும்புலியூர், பெரியார் நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் செந்தில்முருகன் (36). இவர் சென்னையில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் மென்பொறியாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் இவர்  வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் திருச்சி மாவட்டம், ரங்கத்திற்கு சென்றிருந்தார்.  இந்நிலையில் நேற்று இவரது வீடு உட்பட அருகில் உள்ள நான்கு வீடுகளின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை அக்கம்பக்கத்தினர் பார்த்து அதிர்ச்சியடைந்தனர்.

தகவல் அறிந்த தாம்பரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தனர். அப்போது செந்தில்முருகன் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு 20 சவரன்,  தமிழ்ச்செல்வன் என்பவர் வீட்டில் பீரோ உடைக்கப்பட்டு ரூ. 10 ஆயிரம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது. மேலும், அடுத்தடுத்த மூன்று வீடுகளிலும் கொள்ளை முயற்சி நடந்து இருந்தது தெரிய வந்தது. இதுதொடர்பாக, போலீசார் வழக்கு பதிவு செய்து, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். ஒரே இரவில் இரண்டு வீடுகளில் கொள்ளை மற்றும் மூன்று வீடுகளில் கொள்ளை முயற்சி நடைபெற்றுள்ள சம்பவம் தாம்பரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: