×

சென்னை ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க தனி அலுவலர் நியமனம்

சென்னை: தனியார் சிறுபான்மை கல்லூரியான ஜெயின் கல்லூரியை நிர்வாகிக்க கே.சி.எஸ்.காசி நாடார் கல்லூரியின் பொருளியல் துறை உதவி பேராசிரியர்  சந்தோஷ் சுரானா என்பவரை தனி அலுவலராக ஓராண்டு காலத்துக்கு நியமனம் செய்து தமிழக அரசு  ஆணை வெளியிட்டுள்ளது. இதுகுறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்ட அரசாணை: சென்னை துரைப்பாக்கத்தில் செயல்பட்டு வரும் தனியார் சிறுபான்மை கல்லூரியான ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை கல்லூரி நிர்வாக மேற்கொள்ள அசாதாரண நிலையை கருத்தில் கொண்டு, கல்லூரி நிர்வாகத்திடம் விளக்கம் கேட்கப்பட்டது.

பின்னர், ஜெயின் கல்லூரி செயலரின் விளக்கம் மற்றும் கல்லூரிக் கல்வி இயக்குனரின் பரிந்துரை ஆகியவற்றை அரசு கவனமுடன் பரிசீலித்து, அதனை ஏற்று, கடந்த சில ஆண்டுகளாக ஜெயின் கல்லூரியில் அரசு உதவி பெறும் பாடப்பிரிவுகளில் மாணவர் சேர்க்கையை கல்லூரி நிர்வாகம் மேற்கொள்ளாத நிலையில், அங்கு நிலவும் அசாதாரண நிலையை கருத்தில் கொண்டும், கல்லூரியை சுற்றி வசிக்கும் ஏழை-எளிய மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டும், இந்த கல்லூரி சிறுபான்மையினர் கல்லூரி என்பதால், தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் சட்டத்தின்படி, கல்லூரியின் மேலாண்மையை தற்காலிகமாக இடைநீக்கம் செய்கிறது.

மேலும், கல்லூரியின் மேலாண்மையை மறுசீரமைக்கும் வரை இவற்றில் எது பிந்தையதோ அதுவரை அக்கல்லூரியை நிர்வகிக்க அச்சிறுபான்மை இனத்தை சேர்ந்த சென்னை கே.சி.எஸ்.காசி நாடார் கல்லூரியின் பொருளியல் துறை உதவி பேராசிரியர் சந்தோஷ் சுரானா என்பவரை தனி அலுவலராக தமிழ்நாடு தனியார் கல்லூரிகள் (ஒழுங்காற்று) சட்டத்தின்படி, ஓராண்டு காலத்துக்கு நியமனம் செய்து அரசு ஆணையிடுகிறது.   இவ்வாறு அரசாணையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Jain College ,Chennai ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...