×

கீழம்பி கிராம ஊராட்சி பள்ளிக்கு ரூ. 17.36 லட்சம் மதிப்பீட்டில் 2 கூடுதல் வகுப்பறை கட்டிடம்; எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழம்பி கிராம ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் கூடுதல் வகுப்பறை கட்டிடங்களை எழிலரசன் எம்எல்ஏ திறந்து வைத்தார்.
காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கீழம்பி கிராம ஊராட்சி நடுநிலைப்பள்ளி இரண்டு கூடுதல் வகுப்பறை கட்ட காஞ்சிபுரம் தொகுதி எம்எல்ஏ ஏழிலரசன் தனது தொகுதி மேம்பாட்டு நிதி 2020-2021 லிருந்து ரூ. 17.36 லட்சம் நிதி ஒதுக்கினார். இதற்கு கட்டப்பட்ட இரு வகுப்பறைகளை ேநற்று மாணவ, மாணவிகளை கொண்ட எழிலரசன் எம்எல்ஏ ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.

புதிய வகுப்பறை கட்டப்பட்ட இந்த இடத்தில் கடந்த முறை பழைய வகுப்பறை கட்டிடத்தை முன்னாள் முதல்வர் அண்ணாதுரை திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் மலர்கொடி குமார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாலாஜி, திமுக ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், ஒன்றிய குழு உறுப்பினரகள், ஊராட்சி மன்ற தலைவர், திமுக பிரதிநிதிகள் சசிகுமார், மாரிமுத்து, தாமல் இளஞ்செழியன், ரமேஷ், கவின்சிலர் விமல் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Keezhampi Village Panchayat School ,Ehilarasan ,MLA ,
× RELATED நீட் தேர்வை கண்டித்து திமுக மாணவர் அணி...