இட நெருக்கடியில் திணறும் புளியங்குடி காவல் நிலையம்

புளியங்குடி, ஆக. 12: புளியங்குடி காவல் நிலையத்தில் மகளிர் காவல் நிலையமும் சேர்த்து இயங்குவதால் போதுமான இடவசதி இன்றி போலீசார் சிரமப்படுகின்றனர். புளியங்குடி  பஸ் நிலையம் அருகேயுள்ள காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர், எஸ்ஐக்கள், பெண் போலீசார்  உள்ளிட்ட சுமார் 50 பேர் பணியாற்றுகின்றனர்.  இங்கு காவலர்கள் ஓய்வு எடுக்க, அலுவலக பிரிவு, ஆவணங்களை பாதுகாக்க என முதல் மாடியில் பல அறைகள் உள்ளது. தற்போது தமிழக முதல்வரின் உத்தரவு படி அனைத்து உட் கோட்டத்திலும் ஒரு மகளிர் காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படையில் புளியங்குடியில் மகளிர் காவல் நிலையம் காவல் நிலையத்தின் மாடியில் அமைக்கப்பட்டுள்ளது. இதில் ஒரு எஸ்ஐ உள்ளிட்ட 9பேர் பணியாற்றுகின்றனர்.

ஏற்கனவே புளியங்குடி காவல் நிலையம் 16 பெரிய கிராமங்களை உள்ளடக்கிய பெரிய காவல் நிலையம். தினமும் பல்வேறு குற்ற வழக்குகள், விசாரணைகள் நடைபெற்று வரும் நிலையில் சிவகிரி, வாசுதேவநல்லூர், கடையநல்லூர், சொக்கம்பட்டி, சேர்ந்தமரம், புளியங்குடி பகுதிகளை உள்ளடக்கிய மகளிர் காவல் நிலையமும் ஒரே இடத்தில் அமைந்து இருப்பதால் கடுமையான  இட நெருக்கடியாக உள்ளது. மேலும் காவலர்களுக்கு ஓய்வு அறைகள், ஆவணங்கள் பாதுகாக்க போதுமான இடவசதி, கைதிகளை விசாரணை செய்ய தனி இடம் இல்லாததால்  போலீசாரும் கடும் சிரமத்திற்கு ஆளாகின்றனர்.

ஆகவே மகளிர் காவல் நிலையத்தை, சிந்தாமணி பகுதிகளில் இடமாற்றம் செய்வதன் மூலம் இட நெருக்கடியை குறைக்க முடியும் என  சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Related Stories: