குளிகரை தேசிய வங்கி கிளையில் தமிழ்மொழி தெரிந்தவரை மேலாளராக நியமிக்க வேண்டும்

திருவாரூர்,ஆக. 12: திருவாரூர் மக்கள் அதிகாரம் மண்டல ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம் மற்றும் மதிமுக சார்பில் கொள்கை பரப்பு செயலாளர் சீனிவாசன் மற்றும் கிராம மக்கள் சார்பில் திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் அளிக்கப்பட்டுள்ள மனுவில் கூறியிருப்பதாவது, திருவாரூர் அருகே குளிக்கரையில் தேசிய வங்கி கிளை ஒன்று இயங்கி வருகிறது. சுமார் 40 ஆண்டு காலமாக இயங்கி வரும் இந்த கிளையில் குளிக்கரை, பெருந்தரக்குடி, தேவர் கண்ட நல்லூர், தியாகராஜபுரம், கொட்டாரக்குடி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உட்பட மொத்தம் 13 ஆயிரத்து 900 பேர்கள் வாடிக்கையாளர்களாக இருந்து வருகின்றனர். இது மட்டுமின்றிஅரசின் 100 நாள் வேலை திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்கு தொழிலாளர்களுக்கு உரிய ஊதிய தொகையினை பெறுவதற்கும் இந்த வங்கிகளை பயன்படுத்தி வருகின்றனர்.

முழுக்க முழுக்க கிராமப்புறத்தை உள்ளடக்கிய இந்த பகுதியில் இயங்கி வரும் இந்த வங்கி கிளையில் தற்போது மேலாளராக வட மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் பணியாற்றி வரும் நிலையில் அவருக்கு தமிழ் மொழி எழுதப் படிக்க தெரியாததால் வங்கிக்கு வரும் வாடிக்கையாளர்கள் அவரை தொடர்பு கொண்டு பேசுவதற்கு மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே இந்த வட மாநில ஊழியரை மாற்றி விட்டு தமிழ் தெரிந்த ஊழியர் ஒருவரை மேலாளராக நியமிக்க வேண்டுமென அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: