திருவாரூர் மாவட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் குறைதீர் கூட்டம்

திருவாரூர்,ஆக.12: திருவாரூர் மாவட்ட கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: திருவாரூர் மாவட்டத்தில் வசித்து வரும் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வரும் 18ம் தேதி காலை 10 மணியளவில் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது. இதில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் தங்களது குறைகளை மனுக்கள் மூலம் அளித்திடலாம். மனுக்களுடன் முன்னாள் படைவீரர் அடையாள அட்டையின் நகலினை இணைத்திடல் வேண்டும். எனவே, மேற்படி கூட்டத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தோர்கள் கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் என தெரிவித்துள்ளார்.

Related Stories: