நீதித்துறை ஊழியர் சங்கம் கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

தஞ்சாவூர், ஆக.12: நீதிமன்ற வளாகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் எட்வர்ட் தலைமை வகித்தார். கல்யாணம் முன்னிலை வைத்தார். உலகநாதன் சிறப்புரையாற்றினார். பல்வேறு மாவட்ட நீதிமன்றங்களில் பணி உயர்வு வழங்கப்படாமல் உள்ள தகுதியுள்ள அடிப்படைப் பணியாளர்கள், பதிவறை எழுத்தர்கள், நகல் எடுப்பவர்கள் மற்றும் இனநிலைக் கட்டளை நிறைவேற்றுநர்கள் ஆகியோருக்கு பணி உயர்வு வழங்க வேண்டும். தற்காலிக ஊழியர்கள் மற்றும் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள தற்காலிக ஊழியர்கள் ஆகியோர்களை பணி நிரந்தரம் செய்தும் அதன்பின் எஞ்சியுள்ள காலிப் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் அறிவிக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான பணியாளர்கள், பதிவறை எழுத்தர்கள். நகல் எடுப்பவர்கள் மற்றும் இனநிலைக் கட்டளை நிறைவேற்றுநர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: