அதிமுக, பாமகவினர் திமுகவில் ஐக்கியம் விபத்தில் தொழிற்சங்க தலைவர் மூளை சாவு

குன்னம், ஆக.12: திருச்சி புத்தூர் ரோட்டில் வசிப்பவர் மகேந்திரன் (65). இவர் தமிழ்நாடு -குடிநீர் வடிகால் வாரிய தொழிற்சங்க தலைவராகவும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி திருச்சி மாவட்ட குழு உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளில் இருந்து வந்தார். கடந்த ஜூலை மாதம் 30ம் தேதி தனது சொந்த ஊரான குன்னம் வட்டம் கீழக்குடிக்காடு கிராமத்திற்கு சொந்த வேலையாக திருமாந்துறையில் இருந்து பைக்கில் வந்தபோது பின்னால் வேகமாக வந்த ஷேர் ஆட்டோ மோதியது. இதில் தடுமாறி கீழே விழுந்த மகேந்திரன் தலை மற்றும் கை கால்களில் படுகாயம் அடைந்தார். இதைக் கண்ட அக்கம் பக்கத்தினர் மகேந்திரனை சிகிச்சைக்காக திருச்சி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.  இதை தொடர்ந்து குடும்பத்தினர் விருப்பத்தின்படி கண்கள், இருதயம், கல்லீரல் உள்ளிட்ட உறுப்புகளை தானம் செய்தனர். இது குறித்து மங்களமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories: