மூளையில் கட்டி மாணவியின் மருத்துவ சிகிச்சைக்கு கிராம இளைஞர்கள் நிதியுதவி

அரியலூர், ஆக.12: திருமானூர் ஒன்றியம் குருவாடி கிராமத்தில் 12ம் வகுப்பு மாணவிக்கு மூளையில் கட்டியை அறுவை சிகிச்சை மருத்துவ செலவிற்கு கிராம இளைஞர்கள் நிதியுதவி வழங்கினர். அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட குருவாடி கிராமத்தைச் சேர்ந்த ஏழை விவசாய குடும்பத்தை சேர்ந்த தம்பதிகள் சங்கர்- சங்கீதா ஆகியோரின் மகள் சந்தியா (17). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பனிரெண்டாம் வகுப்பு படித்து வருகிறார். சத்யாவுக்கு அடிக்கடி வலிப்பு நோய் வருவதால் மருத்துவரிடம் சென்று பரிசோதித்ததில் மூளையில் இரண்டு நரம்புகளுக்கு இடையே கட்டி இருப்பதாக அதை உடனே அறுவை சிகிச்சை செய்து சரி செய்து அகற்ற ரூ.3 லட்சம் ரூபாய் செலவாகும் என்று கூறினர். இதை அறிந்த அந்த கிராமத்தை சேர்ந்த குருவாடி காமராசர் கல்வி குழு நண்பர்கள் மற்றும் மருத்துவ துறை அலுவலர்கள் சார்பாக சந்தியாவின் மருத்துவ செலவுக்கு ரூ.18 ஆயிரம் வழங்கினர். இந்நிகழ்ச்சியில் காமராசர் கல்வி குழு நண்பர்கள் மணிகண்டன், செந்தில்குமார் மற்றும் அருள் ஆகியோர் கலந்து கொண்டு சந்தியாவின் வீட்டுக்கு சென்று பண உதவி வழங்கினர்.

Related Stories: