×

பெரம்பலூர் மாவட்டத்தில் போதைபொருட்களுக்கு எதிரான உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

பெரம்பலூர், ஆக.12: தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சென்னை கலைவாணர் அரங்கில் போதை பொருட்களுக்கு எதிரான விழிப்புணர்வு சிறப்பு நிகழ்ச்சியினை நேற்று(11ம்தேதி) தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியினை செய்தி மக்கள் தொடர்பு அலுவலக விளம் பர வாகனத்தின் மூலம் நேரலையில் மாணவர்கள் பார்க்கும் வகையில் ஏற்பா டு செய்யப்பட்டிருந்தது. தமிழகம் முழுவதும் 30 லட் சம் மாணவர்கள் பங்கெடு த்துள்ள உலக சாதனை யாக நடைபெற்ற இந்நி கழ்ச்சி தமிழ்நாட்டிற்கு பெருமைக்குரியதாகும். போதைப் பழக்கங்கள் மா ணவர்களிடையே பரவாமல் எதிர்கால சமுதாயத்தை பாதுகாத்திடும் வகையில் தமிழ்நாடு முதலமைச்சர் அறிவுறுத்தலின்பேரில்
தமிழகம் முழுவதும் 30 லட்சம் மாணவர்கள் பங்கேற்று இந்த போதை தடுப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றனர்.

பெரம்பலூர் மாவட்டத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக் க, நடுநிலைப் பள்ளிகள், அரசு உயர்நிலை, மேல்நி லைப் பள்ளிகள், ஆதிதிரா விட நல தொடக்க, நடுநி லை, உயர்நிலை, மேல்நி லைப் பள்ளிகள், நிதியுதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகள், உண்டு உறைவி ட உயர்நிலைப்பள்ளி, சிறப் புப் பள்ளி, மெட்ரிக் உயர் நிலை, மேல்நிலைப் பள்ளி கள், சிபிஎஸ்இ பள்ளிகள், கேந்திர வித்யாலயா பள்ளி என மொத்தம் 524 பள்ளி கள் உள்ளன. தமிழக முதல் வர், பெரம்பலூர் மாவட்ட கலெக்டர், மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர், மாவட்டக் கல்வி அலுவலர் கள், வட்டார கல்வி அலுவ லர்கள் ஆகியோரது அறிவு றுத்தலின் பேரில், நேற்று அனைத்து வகை பள்ளிக ளிலும் போதைத் தடுப்பு வி ழிப்புணர்வு உறுதிமொழி யை ஏற்றனர்.

இதன்படி அரசு மேல்நிலை பள்ளிகளில் 22,339 மாணவ மாணவியர், அரசு உயர்நி லைப் பள்ளிகளில் 7,081 பேர், ஊராட்சி ஒன்றிய நடு நிலைப் பள்ளிகளில் 7830 பேர், ஊராட்சிஒன்றிய தொ டக்கப்பள்ளிகளில் 13,834 பேர் என அரசுப் பள்ளிக ளி ல் 51,084 மாணவ மாணவி யரும், அரசு நிதியுதவி பெ றும் பள்ளிகளில் 12, 418 மாணவ, மாணவியர், சுய நிதிப் பள்ளிகளில் 39,044 மாணவ, மாணவியர், மத் திய அரசு பாடத்திட்டத்தின் கீழ் செயய்படும் கேந்திர வித்யாலயா பள்ளியில் 789 பேர் என மொத்தம் பெரம்ப லூர் மாவட்ட அளவில் 1,03,335 மாணவ, மாணவியர் போதை தடுப்பு விழிப்புண ர்வு உறுதிமொழியை ஏற்ற னர்.

Tags : Perambalur district ,
× RELATED பெரம்பலூர் மாவட்ட கலெக்டர்...