தலித் கிறிஸ்தவர் நலச்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

ஜெயங்கொண்டம், ஆக.12: ஆர்ப்பாட்டத்தில், தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க வேண்டும்.நீதிபதி ரங்கநாத் மிஸ்ரா ஆணையத்தின் அறிக்கையினை உடனே அமல்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்தவர்களை எஸ்சி பட்டியலில் சேர்க்க மத்திய அரசிடம், மாநில அரசு வலியுறுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்னிறுத்தி, மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தப்பட்டது. ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் ஜெயங்கொண்டம் மறைவட்டத் தலைவர் வின்சென்ட்ராஜா தலைமை வகித்தார். கொள்கை பரப்புச் செயலாளர் பவுல்தாஸ், மறை மாவட்டத் தலைவர் ஸ்டீபன்தாஸ் உள்பட பலரும் கலந்து கொண்டனர்

Related Stories: