×

நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா பேட்டி

நாகப்பட்டினம், ஆக.12: நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி விரிவுபடுத்தப்படும் என்று சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா கூறினார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா தலைமையில் நேற்று ஆய்வு நடத்தினர். இதன் பின்னர் நாகப்பட்டினம் கலெக்டர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்தின் முடிவில் சட்டமன்ற பேரவை பொது நிறுவனங்கள் குழு தலைவர் எஸ்.ஆர்.ராஜா கூறியதாவது: கடலோர பேரிடர் அபாயக் குறைப்புத் தொகுப்பு திட்டத்தி கீழ் உலக வங்கி நிதியுதவியுடன் சூறாவளி, புயல், வெள்ளம், சுனாமி, மற்றும் பல இயற்கைப் பேரிடர் காலங்களில் இயற்கை ஆபத்துகள் மூலம் ஏற்படும் பேரிடரைக் குறைக்கும் நோக்கத்துடன் வேளாங்கண்ணி பகுதிக்கு உயர் மற்றும் தாழ் அழுத்த மேல்நிலை மின் விநியோகத்தை புதை வட மூலம் மின் பாதை அமைக்கும் பணி அனைத்துறை ஒத்துழைப்புடன் நிறைவு பெற்றுள்ளது.

ரூ.62.14 கோடி மதிப்பில் மேற்கொள்ளப்பட்ட திட்டத்தில் வேளாங்கண்ணி நகர் பகுதி, ஆலய பகுதி, செருதூர், கிழக்கு கடற்கரை சாலை, சுனாமி நகர், பூக்காரத் தெரு, கிராமத்து மேடு, சிவன் கோயில் மற்றும் கீச்சாங்குப்பம் ஆகிய பகுதிகள் பயன் பெறும். தாம்பரத்தில் இந்த திட்டம் வெற்றிபெற்றுள்ளது. நாகப்பட்டினம், நாகூர் பகுதியில் விரிவுபடுத்தப்படும். அப்போது நவீன இயந்திரங்களை கொண்டு பணிகள் மேம்படுத்தப்படும். திருமருகல் அருகே குழாய் மூலம் காஸ் விநியோகம் செய்வது பாராட்டதக்க வகையில் உள்ளது. இந்த திட்டம் நாகப்பட்டினம் முழுவதும் விரிவுபடுத்தப்படும். நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு தேவையான திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இது அறிக்கையாக தயார் செய்யப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டங்கள் விரைவில் செயல்படுத்தபடும் என்றார்.

Tags : S.R.Raja ,Public ,Enterprises ,Committee ,of the Legislative ,Assembly ,Buzhi North ,Nagapattinam ,Nagor ,
× RELATED வாக்குப்பதிவு நடைபெறும் இன்று வெப்ப...