திமுக செயலாளராக ரகுபதி தேர்வு

சேலம், ஆக.11: சேலம் மத்திய மாவட்டத்திற்குட்பட்ட, சேலம் மாநகர திமுக நிர்வாகிகள் தேர்தலுக்கான வேட்பு மனுக்கள் கட்சி நிர்வாகி களுக்கு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. இதில் தேர்வு செய்யப்பட்ட நிர்வாகிகளுக்கு தேர்தல் அதிகாரி அழகிரி சதாசிவம் மற்றும் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்எல்ஏ ஆகியோர் நேற்று சான்றிதழை வழங்கினர். அதில், சேலம் மாநகர திமுக செயலாளராக ரகுபதி தேர்வு செய்யப்பட்டார். அவைத்தலைவராக முருகன், பொருளாளராக செரீப், துணை செயலாளர்களாக பழக்கடை கணேசன், தினகரன், கோமதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.   மாவட்ட பிரதிநிதிகளாக வெள்ளிமலை, ஈசன் இளங்கோ,  அப்துல் காதர், கருணாநிதி, கந்தவேல், தமிழரசன், பெருமாள், கிருஷ்ணராஜ், முருகன், சுரேஷ் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்கள் அனைவருக்கும் வெற்றி சான்றிதழ் வழங்கப்பட்டது. இதில் மேயர் ராமச்சந்திரன், தீர்மானக்குழு உறுப்பினர் தாமரைக்கண்ணன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் கார்த்திகேயன், ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: