மாரியம்மன் கோயில் திருவிழா

காரிமங்கலம், ஆக.11: காரிமங்கலம் ஒன்றியம், பெரியாம்பட்டி பஞ்சாயத்தில் மாரியம்மன் கோயில் திருவிழா கடந்த 8ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முன்தினம், கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று அதிகாலை, அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பூலாம்பட்டி ஆற்றங்கரையில் இருந்து பக்தர்கள் மேளதாளத்துடன் மாவிளக்கு மற்றும் கரகம் எடுத்து ஊர்வலமாக வந்தனர். இதற்கான ஏற்பாடுகளை ராஜகுரு, நாகராஜ், கோவிந்தன், பஞ்சாயத்து தலைவர் ஜெயலட்சுமி சங்கர், பாண்டுரங்கன், பிடிஏ தலைவர் மனோகரன், கணேசன், இளைஞரணி மகேஷ்குமார், கவுன்சிலர் உதயகுமார் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: