வெடிகுண்டு வீசிய வழக்கு திருச்சி கோர்ட்டில் வாலிபர் சரண்

திருச்சி,ஆக.11: வெடிகுண்டு வீசிய வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த வாலிபர் திருச்சி கோர்ட்டில் நேற்று சரணடைந்தார். தமிழர் நீதிகட்சி தலைவர் சுபா இளவரசன். இவர் அரியலுார் பகுதியில் பல்வேறு நிகழ்சிகளில் கலந்து கொள்ள கடந்த பிப்ரவரி மாதம் 1-ம் தேதி வந்தார். அப்போது இவரது கார் உடையார்பாளையம் பகுதியில் சென்றபோது மற்றொரு காரில் வந்த 11 பேர் கொண்ட கும்பல் வெடிகுண்டு வீசியது. இதுகுறித்து உடையாளர்பாளையம் போலீசார் 11 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த பிரபாகரன் (30) என்பவர் நேற்று குற்றவியல் நடுவர் நீதிமன்றம் எண் 2ல் சரண் அடைந்தார்.

Related Stories: