கலைஞரின் வேளாண் வளர்ச்சி திட்டத்தில் தேர்வு சித்தாடி கிராம விவசாயிகளுக்கு விதை உற்பத்தி பயிற்சி

மன்னார்குடி, ஆக. 11: கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள சித்தாடி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின் கீழ் விதை உற்பத்தி பயிற்சி வகுப்பு நடந்தது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களையும் தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதற்கு செயல் படுத்தப்பட்டு வரும் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்பட்டுள்ள செருகளத்தூர் அடுத்த சித்தாடி கிராமத்தில் வேளாண்மை தொழில் நுட்ப மேலாண்மை முகமை திட்டத்தின்கீழ் வட்டார குழு அமைப்பாளர் ஜெயசீலன் வழிகாட்டுதலின் பேரில் தரமான விதை உற்பத்தி பயிற்சி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது.

பயிற்சியில், திருவாரூர் மாவட்ட விதைச்சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குநர் ஜெயபிரகாஷ் சான்று பெற்ற விதைகளின் குணாதிசயங்களையும் குறுவை, சம்பா, தாளடி பருவத்திற்கேற்ற ரகங்களை தெரிவு செய்து தரமான விதை உற்பத்தி செய்வது குறித்து விவசாயிகளுக்கு விரி வாக பயிற்சி அளித்தார். மேலும், விதைச்சான்று அலுவலர் பிரபு விதை ப்பண்ணை பதிவு, வயல் ஆய்வு மற்றும் பிற ரக கலவன்கள் நீக்கம் செய்வது, அங்கக சான்று பண்ணைகள் பதிவு மற்றும் நடைமுறைகள் குறித்தும் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார். இப்பயிற்சிக்கான ஏற்பாட்டினை வட்டார தொழில்நுட்ப அலுவலர் வேல் முருகன், உதவி தொழில்நுட்ப அலுவலர்கள் செல்வம் மற்றும் ஹேமலதா ஆகியோர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில், ஊராட்சி மன்ற தலைவர், உழவர் நண்பர் மற்றும் உதவி விதை அலுவலர், உதவி வேளாண்மை அலுவலர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: