×

கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் ஏலம் பருத்தி குவிண்டாலுக்கு ரூ.11ஆயிரத்து 939க்கு விற்பனை

கும்பகோணம், ஆக.11: கும்பகோணத்தில் நேற்று பருத்தி ஏலம் நடைபெற்றது. இதில் அதிகபட்சமாக குவிண்டாலுக்கு ரூ.11 ஆயிரத்து 939க்கு விற்பனையானது. தஞ்சாவூர் விற்பனை குழுவின் கீழ் செயல்படும் கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் வாரந்தோறும் புதன்கிழமையன்று பருத்தி ஏலம் நடைபெறுவது வழக்கம்.அதன்படி நேற்று கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கண்காணிப்பாளர் பிரியமாலினி முன்னிலையில் பருத்தி மறைமுக ஏலம் நடைபெற்றது.

இந்த வாராந்திர ஏலத்திற்காக கும்பகோணத்தை சுற்றியுள்ள கிராமத்தில் இருந்து மொத்தம் 2 ஆயிரத்து 253 லாட் கொண்டு வரப்பட்டது. விவசாயிகள் சராசரியாக 3000 குவிண்டால் பருத்தி எடுத்து வந்தனர். இதில் கும்பகோணம், பண்ரூட்டி, திருப்பூர், ஆந்திரா மற்றும் செம்பனார்கோவில் ஆகிய பகுதிகளை சார்ந்த 11வியாபாரிகள் கலந்து கொண்டனர். பருத்தி மதிப்பு சராசரியாக ரூ.3.29 கோடி ஆகும்.இதில் தனியார் வியாபாரிகளின் அதிகபட்ச விலை ரூ.11 ஆயிரத்து 939 ஆகும்,குறைந்தபட்ச விலை ரூ.10 ஆயிரத்து 9 ஆகும்.சராசரி மதிப்பு ரூ.10 ஆயிரத்து 999 ஆகும்.

Tags : Kumbakonam Regulation Hall ,
× RELATED கும்பகோணம் ஒழுங்குமுறை விற்பனை...