காணாமல் போன டூவீலர் மீட்பு உரிமையாளரிடம் போலீசார் ஒப்படைத்தனர்

தஞ்சாவூர், ஆக.10: ஜனவரி மாதம் காணாமல் போன இருசக்கர வாகனத்தை மீட்டு அம்மாபேட்டை போலீஸார் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். தஞ்சாவூர் மாவட்டம் தளவாய்பாளையம் பகுதியைச் சேர்ந்த கோகிலா என்பவர் ஜனவரி மாதம் தனது இருசக்கர வாகனம் திருட்டு போனதாக அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். இந்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் அந்த வாகனத்தை தேடி வந்தனர். இதையடுத்து நேற்று காலை போலீசார் சாயங்காலத்தில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த இடையிருப்பு பகுதியை சேர்ந்த முருகையன் மகன் காட்டாரி (எ) செல்வராஜ் ஓட்டி வந்த வாகனத்தை போலீசார் சோதனையிட்டனர். இந்நிலையில் அந்த வாகனம் கோகிலாவுக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில் அந்த வாகனம் திருடப்பட்டது தெரியவந்தது. எனவே செல்வராஜ் மீது வழக்கு பதிவு செய்து அவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். இதையடுத்து வாகனத்தை உரிமையாளர் கோகிலாவிடம் போலீசார் ஒப்படைத்தனர்.

Related Stories: