திருமானூர் பகுதியில் கரும்பு பயிர்களில் பூஞ்சான நோய் பாதிப்பு: எம்எல்ஏ ஆய்வு

அரியலூர், ஆக.11: திருமானூர் பகுதிகளில் கரும்பு பயிரை தாக்கியுள்ள பூஞ்சான நோய் பாதிப்பை அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா நேரில் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட அரண்மனைக்குறிச்சி, காமேட்டுதெரு, பாளையபாடி உள்ளிட்ட பகுதிகளில் கரும்பு பயிர் சாகுபடியை தாக்கியுள்ள பூஞ்சான நோய் பாதிப்பினை, அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் சின்னப்பா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அதன் பின்னர், அப்பகுதியில் கரும்பு பயிரிட்டு பாதிப்புக்குள்ள விவசாயிகளுக்கு ஆறுதல் கூறி, வேளாண்மைத்துறை அலுவலர் அலுவலர்களுக்கு பூஞ்சான நோய் தாக்குதலுக்கு உரிய நடவடிக்கை எடுக்க ஆலோசனை வழங்கினார். இந்நிகழ்வில் சாத்தமங்கலம் கோத்தாரி சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாக அலுவலர் ரவி, திருமானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் லதா, திருமானூர் ஊராட்சி மன்ற தலைவர் உத்ராபதி, அரியலூர் வடக்கு மதிமுக ஒன்றிய செயலாளர் சங்கர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.

Related Stories: