ஜெயங்கொண்டம் அருகே கொலை மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஜெயங்கொண்டம், ஆக.11: அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தழுதாழைமேடு பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன் பெண் ஒருவர் பாத்ரூமில் குளித்ததை அதே பகுதியை துரைசிங்கம் (21) என்ற வாலிபர் மறைந்திருந்து பார்த்ததாகவும், இதனை கண்டித்த பெண்ணின் கணவரை துரைசிங்கம் திட்டி மிரட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக மீன்சுருட்டி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் மீன்சுருட்டி போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் இலஞ்சியம் வழக்கு பதிவு செய்து துரைசிங்கத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

Related Stories: