வேதாரண்யம் அரசு கல்லூரியில் சேர மாணவிகள் அதிக ஆர்வம்

வேதாரண்யம், ஆக. 11: வேதாரண்யம் அரசு கலைக்கல்லூரியில் முதலாம் ஆண்டு சேர்க்கை கல்லூரியில் சேர அதிக மாணவிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேதாரண்யம் அரசு கலைக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கைக நேற்று துவங்கியது. இதில் ஆன்லைன் மூலம் விண்ணபித்த 475 மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு வந்து நேரிடையாக நடைபெற்ற காலந்தாய்வில் கலந்துகொண்டு தங்ளுக்கு விருப்பான பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கல்லூரியில் சேர்ந்தனர்.

கல்லூரியில் சேர்ந்த மாணவர்களுக்கு கல்லூரி முதல்வர் முருகன் சேர்க்கைக்கான ஆணையை வழங்கினார். நிகழ்ச்சியில் கல்லூரி பேரசிரியர்கள் அறிவுச் செல்வம், பிரபாகரன் மாரிமுத்து.,ராஜா உள்ளிட்ட கல்லூரி பேரசிரியர்கள் பங்கேற்றனர் இக்கல்லூரியில் சுமார் 1700 மாணவர்கள் படித்து வருகின்றனர். இதில் 1600 மாணவிகளும் 100 மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த ஆண்டும் கல்லூரியில் சேர்ந்த படிக்க அதிக அளவில் மாணவிகள் வந்து இருந்தது குறிப்பிடதக்கது.

Related Stories: