வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சத்துணவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

வேதாரண்யம், ஆக. 11: வேதாரண்யம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள், ஆண் சத்துணவு பணியாளர்கள் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை சத்துணவு பணியாளர்களிடமே வழங்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட தலைவர் ராமமூர்த்தி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் ராஜு, மாவட்ட துணைத் தலைவர் தமிழரசி, ஒன்றிய செயலாளர் அருள்விழி, ஒன்றிய பொருளாளர் உஷா, மாவட்ட இணைச்செயலாளர் செல்வராணி, மாநில செயற்குழு உறுப்பினர் துர்கா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பெண் சத்துணவு பணியாளர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். பின்னர் கோரிக்கை அடங்கிய மனுவை ஊராட்சி ஒன்றிய ஆணையர் பாஸ்கர் இடம் வழங்கினர்

Related Stories: