புகழூர் நகராட்சியில் ரூ.58 லட்சம் மதிப்பில் திட்ட பணிகள்

வேலாயுதம்பாளையம், ஆக. 11: கரூர் மாவட்டம் புகழூர் நகராட்சியில் ரூ.58 லட்சம் மதிப்பிலான திட்டப்பணிகளை எம்எல்ஏ இளங்கோ தொடங்கி வைத்தார். புகழூர் நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் அண்ணா நகர் மற்றும் தட்டாங்காடு, கக்கன் காலனி ஆகிய 3 இடங்களில் தலா ரூ.19 லட்சத்து 28ஆயிரம் என மொத்தம் ரூ.57லட்சத்து 84 ஆயிரம் மதிப்பில் சமுதாய கழிப்பிடம் கட்டும் பணிக்கான பூமி பூஜை விழா நடைபெற்றது. பூமி பூஜை விழாவிற்கு புகழூர் நகராட்சித்தலைவர் சேகர் என்கிற குணசேகரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் பிரதாபன் முன்னிலை வகித்தார் . நகராட்சி ஆணையர் கனிராஜ் அனைவரையும் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக அரவக்குறிச்சி எம்எல்ஏ மொஞ்சனூர் இளங்கோ கலந்து கொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார். இதில் நகராட்சி வார்டு கவுன்சிலர்கள் மற்றும் நகராட்சி அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: