ஆத்தூர் கூட்டுறவு சங்கத்தில் கடன்மேளா

ஆறுமுகநேரி,ஆக.11:  ஆத்தூர் கஸ்பா தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கடன்மேளா நடந்தது. நிகழ்ச்சிக்கு நபார்டு வங்கி உதவி பொது மேலாளர் சுரேஷ்ராமலிங்கம் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் ஹேமமாலினி, துணைத்தலைவர் புஹாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலர் ஸ்டெல்லா தமிழ்ச்செல்வி வரவேற்றார். இதில் மதுரை கோவிந்தராஜ் கலைக்குழுவினர், தமிழக அரசு கூட்டுறவு சங்கங்கள் மூலம் பொதுமக்களுக்கு வழங்கி வரும் பல்வேறு வகையான கடன்கள் குறித்து விளக்கினர். தொடர்ந்து நிகழ்ச்சியில் 3பேருக்கு ரூ.1.50லட்சம் கடன் வழங்கப்பட்டது. மேலும் மாற்றுத்திறனாளிகள் 10பேருக்கு ரூ.5லட்சம் கடன் வழங்குவதற்கும், 2 ஆண்கள் சுயஉதவிக்குழுக்களை சேர்ந்த 20 பேருக்கு ரூ.20லட்சம் கடன் வழங்குவதற்கும் விண்ணப்பங்கள் வழங்கப்பட்டது. நிழ்ச்சியில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி திருச்செந்தூர் பீல்டு மேனேஜர் ரவீந்திரன் உள்பட பலர் கலந்துக்கொண்டனர். இதில் சங்கத்தின் இயக்குனர்களும், பொதுமக்களும், பயனாளிகளும் கலந்துகொண்டனர்.

Related Stories: