கோவில்பட்டி வேலாயுதபுரம் பள்ளி ஆண்டு விழா கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பங்கேற்பு

கோவில்பட்டி, ஆக.11:  கோவில்பட்டி வேலாயுதபுரம் நாடார் உறவின்முறைக்கு சொந்தமான ஈ.வே.அ.வள்ளிமுத்து துவக்க, உயர்நிலைப்பள்ளிகளின் 66வது ஆண்டு விழா நடந்தது. பள்ளி செயலர் வேல்முருகேசன் தலைமை வகித்தார். தொழிலதிபர் திலகரத்தினம் முன்னிலை வகித்தார். ஆசிரியர் வினோத்கண்ணன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக முன்னாள் அமைச்சரும், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். நகர செயலாளர் விஜயபாண்டியன், கடம்பூர் இந்து நாடார் உறவின்முறை சங்க பொதுச் செயலாளர் காளிராஜன், 5வது வார்டு அவைத்தலைவர் செல்வமணி, செயலாளர் நல்லவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

நிகழ்ச்சியில் துணைசேர்மன் பழனிச்சாமி, ஒன்றிய செயலாளர் அன்புராஜ், வழக்கறிஞர்கள் சங்கர் கணேஷ், ஈஸ்வரமூர்த்தி, கவுன்சிலர்கள் கவியரசு, வள்ளியம்மாள் மாரியப்பன், உயர்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் துரை, துவக்கப்பள்ளி தலைமையாசிரியர் தங்கத்தாய், ஆபிரகாம் அய்யாத்துரை, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் போடுசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: