மூக்குப்பீறி பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம்

நாசரேத், ஆக.11:  நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு மேல்நிலைப்பள்ளியில் சிலம்ப பயிற்சி முகாம் நடந்தது. நாசரேத் போலீஸ் இன்ஸ்பெக்டர் பட்டாணி தலைமை வகித்து மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். மாநில அளவிலான போட்டியில் வெற்றி பெற இந்த பயிற்சி நடந்தது. திசையன்விளை சிலம்ப பயிற்சியாளர் பாலசுப்பிரமணியம் தலைமையில் குழுவினர் பயிற்சி அளித்தனர். இதில் தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சிலம்ப மாணவ-மாணவிகள், பள்ளி தாளாளர் செல்வின், துணைஆய்வாளர் ஆனந்தகுமார், திருச்செந்தூர் வீரபாபு உள்பட பலர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை மாஸ்டர் டென்னிசன் செய்திருந்தார்.

Related Stories: