வீரவநல்லூர் அருகே மாமியாரை கம்பியால் தாக்கிய மருமகள் உள்பட இருவர் கைது

நெல்லை, ஆக. 11: வீரவநல்லூர் அருகே கொட்டாரகுறிச்சியில் மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கிய மருமகள் உள்ளிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர்.  வீரவநல்லூர் அருகே கொட்டாரகுறிச்சியைச் சேர்ந்தவர் இசக்கியம்மாள் (54). இவரது மகன் மகாராஜன் என்பவர், முதல் மனைவி இறந்தபிறகு பேச்சியம்மாள் (21) என்பவரை மணம் முடித்துகொண்டார். இதையடுத்து பேச்சியம்மாளிடம் தனது மகனின் முதல் மனைவியின் குழந்தையை பார்த்துக் கொள்ளுமாறு மாமியாரான இசக்கியம்மாள் நேற்று கூறினார். இதையடுத்து ஏற்பட்ட தகராறில் பேச்சியம்மாளும், அவரது தாய் சுந்தரி (42) என்பவரும் சேர்ந்து இசக்கியம்மாளை அவதூறாகப் பேசியதோடு இரும்பு கம்பியால் தாக்கினர்.

மேலும் கொலை மிரட்டலும் விடுத்தனராம். புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வீரவநல்லூர் எஸ்.ஐ. காவுராஜன், இசக்கியம்மாளை இரும்பு கம்பியால் தாக்கி மிரட்டல் விடுத்த பேச்சியம்மாள், சுந்தரி ஆகிய இருவரையும் கைது செய்தார்.

Related Stories: