திமுக உட்கட்சி தேர்தல் சிவகாசி மாநகர பொறுப்புகளுக்கு இன்று விருப்ப மனு பெறப்படும் மாநகர திமுக பொறுப்பாளர் தகவல்

சிவகாசி, ஆக. 10: சிவகாசி மாநகர பதவிகளுக்கான தேர்தலுக்கு, திமுகவினரிடமிருந்து இன்று விருப்ப மனு பெறப்படும் என மாநகர திமுக பொறுப்பாளர் காளிராஜன் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

திமுகவின் 15வது உட்கட்சி தேர்தல் திமுக தலைவர் ஸ்டாலின் ஆணைப்படி, விருதுநகர் வடக்கு மாவட்ட செயலாளரும், தொழில்துறை அமைச்சருமான தங்கம்தென்னரசு வழிகாட்டுதல்படி சிவகாசி மாநகர பொறுப்புகளுக்கு விருப்பம் மனு வழங்கும் நிகழ்ச்சி இன்று (10.9.2022) காலை 10:30 மணியளவில் வேலாயுதம் ரோட்டில் உள்ள சிவகாசி ரோட்டரி கிளப் ஆப் சென்ட்ரல் அலுவலகத்தில் நடைபெறுகிறது. தலைமை கழக பொறுப்பாளரும் பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி விருப்ப மனு வழங்க உள்ளார்கள். மாநகர அவைத்தலைவர், மாநகர செயலாளர், மாநகர துணைச்செயலாளர்கள், மாநகர துணைச்செயலாளர்கள், மாநகர பொருளாளர், மாநகர மாவட்ட பிரதிநிதிகள் உட்பட மாநகரப் பொறுப்பு பதவிகளுக்கு விருப்ப மனு வழங்குபவர்கள் இன்று காலை தேர்தல் பொறுப்பாளரிடம் வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

Related Stories: