சிங்கம்புணரி அருகே அம்மன் கோயிலில் ஆடி திருவிழா

சிங்கம்புணரி, ஆக.10: சிங்கம்புணரி அருகே காளாப்பூர் கிராமத்திலுள்ள வடக்கு வாசல் செல்வி அம்மன் கோயில் ஆடித்திருவிழா நேற்று நடைபெற்றது. இதையொட்டி காலையில் கோவில் முன்பு உள்ள திடலில் திரளான கிராம பொதுமக்கள் ஆடு,கோழிகளை பலியிட்டு பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

Related Stories: