ரக்சாபந்தன் விழா

திருப்பூர், ஆக. 10:  காந்திநகரில்  உள்ள பிரஜாபித பிரம்மா குமாரிகள் ராஜயோக தியான நிலையத்தில் ரக்சாபந்தன்  விழா நடந்தது. இதில் தென்மண்டல பிரஜாபித பிரம்மா குமாரிகள் ஈஸ்வரிய விஷ்வ  வித்யாலயத்தின் தலைமை நிர்வாகி ராஜயோகினி பீனா கலந்துகொண்டு விழாவினை  தொடங்கிவைத்து பேசினார். அப்போது சகோதரத்துவம் மற்றும் இறையன்பு  உள்ளிட்டவைகள் குறித்து பேசினார். திருப்பூர் மண்டல பிரம்மா குமாரிகளின்  தலைமை நிர்வாகி ராஜயோகினி ரேணுகா முன்னிலை வகித்து பேசினார். இதில்  ஏராளமானவர்கள் கலந்துகொண்டனர். அனைவருக்கும் தந்தை இறைவன் மற்றும் அனைவரும்  சகோதரர்கள் என்பதை உணர்த்தும் வகையில் ராக்கி அணிவித்து ரக்சாபந்தன்  கொண்டாடப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: