×

இந்திய விமானப்படையின் விழிப்புணர்வு வாகனம்


கோவை, ஆக.10:  இந்திய விமானப்படையில் அதிகாரிகளாக சேர்வது தொடர்பாக தென்னிந்திய இளைஞர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்பு வாகனம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதற்கு கோவையில் உள்ள இந்திய விமானப்படை நிர்வாகவியல் கல்லூரி நோடல் மையமாக உள்ளது. இந்த வாகனத்தின் மூலம் விமானப்படை அதிகாரிகள் கோவை பகுதியில் உள்ள கல்லூரிகள், பள்ளிகளுக்கு பயணம் சென்று விமானப்படையின் சிறப்புகள், வேலைவாய்ப்புகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர். இதன் ஒரு பகுதியாக, கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் பெண்கள் கல்லூரிக்கு விழிப்புணர்வு வாகனத்துடன் சென்ற விமானப்படை அதிகாரிகள், மாணவிகளுடன் கலந்துரையாடினர். அப்போது, விமானப்படையில் சேர தேவையான படிப்பு, உடற்தகுதி, வயது உள்ளிட்டவை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர். மேலும், மாணவிகள் பிரத்யேக சிறப்பு வாகனத்தை பார்வையிட்டனர். இந்த வாகனத்தில், ஏர் டிராபிக் கன்ட்ரோல் சோன், விமான ஸ்டிமுலேட்டர் பயன்படுத்தி இயக்குவது, விமானப்படையில் உள்ள வேலைவாய்ப்புகள் மற்றும் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றிருந்தது. இந்த விழிப்புணர்வு வாகனம் வரும் 17-ம் தேதி வரை கோவையின் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு பயணித்து விமானப்படையில் இளைஞர்கள் சேருவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளதாக இந்திய விமானப்படை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Indian Air Force ,
× RELATED பரப்புரைக்கு அரசு ஹெலிகாப்டரை...