×

மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்

சேலம், ஆக.10: சேலம் மின்பகிர்மான வட்டம் வாழப்பாடி கோட்டத்தில் மாதாந்திர மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம் வரும் 12ம் தேதி காலை 11 மணிக்கு நடக்கிறது. சிங்கிபுரம் துணை மின்நிலையத்தில் உள்ள கோட்ட அலுவலகத்தில் நடக்கும் இக்கூட்டத்தில் மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி கலந்துகொண்டு, குறைகளை கேட்டறிகிறார். கோட்டத்திற்கு உட்பட்ட மின்நுகர்வோர்கள், தங்களது குறைகளை நேரில் வந்து தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம் என்று வாழப்பாடி செயற்பொறியாளர் முல்லை தெரிவித்துள்ளார்.

Tags :
× RELATED கிளி வளர்த்த 3பேருக்கு ₹15 ஆயிரம் அபராதம்