சுதந்திர தின பொன்விழாவையொட்டி தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரசார் பிரசார நடை பயணம்

தஞ்சாவூர், ஆக.10: சுதந்திர தின பொன் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பிரசார நடை பயணம் மேற்கொண்டனர். சுதந்திர தின பொன் விழாவை முன்னிட்டு தஞ்சாவூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பாக பிரசார நடை பயணம் நடைபெற்றது. 100 பேருக்கு மேலான காங்கிரஸ் தொண்டர்கள் பிரசாரத்தில் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாநகராட்சியில் உள்ள காந்தி சிலைக்கு தஞ்சாவூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார் தலைமையில் மாலை அணிவிக்கப்பட்டு பிரசார நடை பயணம் தொடங்கியது.

நடை பயணம் தஞ்சாவூரிலிருந்து புறப்பட்டு ஒரத்தநாடு, மதுக்கூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாசத்திரம் வழியாக மல்லிப்பட்டிணத்தை வரும் 14ம் தேதி சென்றடைகிறது. பிரச்சார நடை பயணத்தின் ஆரம்பத்தில் மாவட்ட காங்கிரஸ் பொதுச் செயலாளர் மோகன்ராஜ் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட துணைத்தலைவர்கள் வக்கீல் அன்பரசன், பட்டுக்கோட்டை ராமசாமி, மாநில துணைத்தலைவர் பண்ண வயல் ராஜாதம்பி, அகில இந்திய காங்கிரஸ் உறுப்பினர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் மாநகர, மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் சத்தியமூர்த்தி, பட்டுக்கோட்டை நகரத்தலைவர் ரவிக்குமார், சிறுபான்மைப் பிரிவுத்தலைவர் நாகூர்கனி, வட்டாரத்தலைவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: