கந்தர்வகோட்டை வெள்ளை முனியாண்டவர் கோயிலில் சிறப்பு பூஜை

கந்தர்வகோட்டை, ஆக.10: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை நகரின் மையப் பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட  வெள்ளை முனியாண்டவர்,  காளியம்மன் கோயிலில் சக்கரை பொங்கல் வைத்தும், ஆட்டுகிடா வெட்டி ஆதிவிமர்ச்சையாக விழா நடைபெற்றது. இந்த விழாவில் கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, பிசானத்தூர், முதுகுளம் ஆகிய பகுதியை சேர்க்க ஐநூறு குடும்பங்களுக்கு மேல் காளியம்மனுக்கு சர்கரை பொங்கல் வைத்தும், வெள்ளை முனியாண்டவருக்கு 150 ஆட்டுகிடாகள் வெட்டியும் எண்ணற்ற அரிசி மூட்டைகளில் சோறு வடித்து ஆயிரகணக்கான பக்தர்களும், ஊர் பொதுமக்களுக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

இப்பகுதி கிராமங்களில் இருந்து ேநற்று முன்தினம் இரவே வண்டி, வாகனங்கள் மூலம் கோயில் வளாகத்திற்கு மக்கள் வந்து குவிந்தனர். கோயில் வளாகம் முழுவதும் திரும்பும் திசை எல்லாம் வாகனமும், மக்கள் கூட்டமும் நிரம்பி வழிந்தன. இதனை காணும்போது கண் கொள்ள காட்சியாக இருந்தது. கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் ஜொலித்தது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை இன்ஸ்பெக்டர் செந்தில் மாறன் தலைமையில் போலீசார் பணியில் இருந்தனர். கிடா வெட்டு பூஜைக்கு வந்த பக்தர்கள் அனைவரும் இறையருள் பெற்று சென்றனர்.

Related Stories: